Monday, March 29, 2010

PIN விளைவுகள் - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை - 3

 டிஸ்கி: அக்குபஞ்சர் பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காக எழுதுகிறேனே தவிர, எழுத்துக்கும் வலைப்பதிவிற்கும் நான் புதியவன் என்பதால் என் எழுத்துப்பிழைகளை பொறுத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------

ங்களுக்கு இன்னொரு ஆச்சர்யமான விஷயம் தெரியுமா..! இந்தத் தொடரைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு, ஏற்கனவே அக்குபஞ்சர் தெரியும் என்று சொன்னால் உங்களால் நம்பமுடியுமா..? இது உண்மை... எப்படித் தெரியுமா..!

இதற்கு முந்தைய பகுதியில், இந்தத் தொடரைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு, ஏற்கனவே அக்குபஞ்சர் தெரியும் என்று சொல்லியிருந்தேன். கண்டிப்பா அதை நீங்க நம்பியிருக்க மாட்டீர்கள்..!

இதோ அதற்கான சான்று!

ஏதாவது விஷயத்தை நீங்கள் மறந்துவிட்டீர்களென்றால் என்ன செய்வீர்கள்? நெற்றியில் விரலால் தேய்த்தபடி யோசிப்பீர்களல்லவா..! அதுவும் ஒரு அக்குபஞ்சர் பாய்ண்ட்-தான். அதே போல், நீங்கள் பள்ளியில் படிக்கும்போது, வகுப்பறையில் மாணவர்கள் தூங்கினால், டீச்சர் வந்து காதைத் திருகி எழுப்புவார்களல்லவா..! அதுவும் ஒரு அக்கு பாய்ண்ட்-தான். காது திருகப்படும்போது, மூளைக்கான இரத்த ஓட்டம் அதிகமாகி விரைவில் முழிப்பு வந்துவிடும். அதே போல், தலையில் குட்டுவதும் மூளையை ஸ்டிமுலேட் செய்து மாணவனை துடிப்பாக ஆக்கும். வாத்தியார் நம்மை இதெல்லாம் செய்து முடித்ததும் நாம் அழுதுக் கொண்டிருப்பதால் இதையெல்லாம் கவனித்திருக்கு மாட்டோம்.

இதுமட்டுமல்ல, ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாசம் வெறும் காலில் நடக்க வேண்டும் என்று பழக்கம் உள்ளதல்லவா! அது பயங்கரமான பழக்கம், இதை பழகும்போது, அந்த பக்தர்களுக்கு உள்ளங்கால் மூலமாக எல்லா உறுப்புகளுக்கும் சீராக எனெர்ஜியானது சர்குலேட் ஆகும். இது இப்போது வேண்டுமானால், வருடம் ஒருமுறை மட்டுமே நமக்கு வாய்க்கலாம், ஆனால் முன்னொருகாலத்தில், காலில் செருப்பு அணியாமல் நடந்த நம் முன்னோர்கள் அனைவரும் அதிக காலம் வாழ்ந்திருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

அக்குபஞ்சர் ஊசி உங்கள் உடம்பில் குத்தப்படும்போது எப்படி இயங்குகிறது..?

உங்கள் உடம்பில் குத்தப்படும் ஊசி, குளத்தில் எறிந்த கல் ஏற்படுத்தும் கொப்புள்சுழிபோல் அந்த இடத்தைச்சுற்றி ஒரு எனர்ஜி அலையை ஏற்படுத்தும், அந்த அலையானது, தொடர்ந்து சென்று அடுத்த அக்குப் புள்ளியை ஸ்டிமுலேட் செய்யும், அப்போது, அந்த புள்ளி மீண்டும் ஒரு அலையை ஏற்படுத்தும், இப்படி அந்த அலைகளின் தொடர்ச்சி, நாம் எந்த உறுப்பை நோக்கி ஊசி செலுத்தினோமோ, அந்த உறுப்பிற்கு சென்றடையும். இப்படி நம் உடம்பின் பல்வேறு இடங்களில் பரவியிருக்கும் எனர்ஜிகளை வெவ்வேறு பாய்ண்டுகள் மூலம் தேக்கி, அந்த குறிப்பிட்ட உறுப்பிற்கு செலுத்தப்படும்.

இதில் ஒரு அட்வான்டேஜ் என்னவென்றால், நாம் எனர்ஜியை வழிப்படுத்தி கொண்டு செல்லும் பாதையில் இருக்கும் மற்ற உள்ளுறுப்புகளுக்கும் அந்த எனர்ஜியானது போய் சேரும். எனவே அந்த உறுப்புகளும் சீராகும்.  உதாரணத்திற்கு, சென்ற வருடம், ஒரு பேஷண்ட், தனக்கு கிட்னியில் கல் இருப்பதாக கூறி என்னிடம் வந்தார்... அவரது கிட்னிக்கு எனர்ஜி செலுத்தும் வகையில் நான் அவரது பாதத்தி(லும்)ல் ஊசி குத்தியிருந்தேன். சுமார் 30 நாட்கள் இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்ட அவர், சிகிச்சையின் முடிவில், கிட்னியில் இருந்த கல் கரைந்தது குறித்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார், அப்போது, தனக்கு நீண்ட நாட்களாக காலில் இருந்த ஒரு சின்ன வீக்கமும் இப்போது சரியாக விட்டது என்று கூறினார். எனக்கு அவரிடம் இந்த பிரச்சினை இருப்பது தெரியவே தெரியாது. எனது நோக்கம் அவரது கிட்னியை குணப்படுவது மட்டுமே..! அவரது கால்வீக்கத்தை அல்ல! ஆனால் காலில் குத்தப்பட்ட ஊசி அவரது வீக்கத்தையும் சேர்த்து குணப்படுத்தியிருக்கிறது. இதில் பக்கவிளைவுகள் எதுவும் வரவே வராது என்பது உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்! ஆனால், அதற்கும் ஒருபடி மேலாக, சிகிச்சையில் நமக்கிருக்கும் இதர பிரச்சினைகளும் குணமாவது என்பது நல்லதுதானே..!

இந்த வார டிப்ஸ்
நமது உடம்பில் டெம்பரேச்சர் அதிகமாகும்போது, நமது இடது அல்லது வலது கையில், ஆள்காட்டி விரலிலும் மற்றும் கட்டை விரலிலும், இருபது அல்லது முப்பது நிமிடத்திற்கு, நாம் துணிகாய வைக்க உபயோகிக்கும் ப்ளாஸ்டிக் க்ளிப்பை (இரும்பு க்ளிப் வேண்டாம்), விரல் நுணியில் மாட்டி வைக்க, டெம்பரேச்சர் சீராகும்.


இந்த வார QUOTE
QI permeates all activivites of universe...
If tree is planted heaven helps to grow, if it is cut down, heaven helps to rot.

                                                                                           - Shih Tshu Lai Chi, 1005 A.D.

(தொடரும்...)

Sunday, March 21, 2010

PIN விளைவுகள் - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை - 2


டிஸ்கி: அக்குபஞ்சர் பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காக எழுதுகிறேனே தவிர, எழுத்துக்கும் வலைப்பதிவிற்கும் நான் புதியவன் என்பதால் என் எழுத்துப்பிழைகளை பொறுத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------

ப்பாளி இலையை சாப்பிட்டால், கேன்ஸர் உண்டாக்கிற செல்ஸ் குறையுமென்று, கடந்த மார்ச் 11ஆம்(2010) தேதி தினகரன் பேப்பரில் படித்தேன். இந்த விஷயத்தை, 13 வருஷமாக ஒரு மருத்துவர் FLORIDAவுல ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடித்திருக்கிறார். இதே விஷயத்தை ஒரு பரம்பரை சித்த வைத்தியர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். ஆனால், அவர் சொன்னது தினகரனில் வரவில்லை. என்ன செய்ய..! யாரோ ஒருத்தர் ஃபாரினில் சொன்னால் கேட்கிறார்கள், நம் பக்கத்து தெரு வைத்தியர் சொன்னால் நம்பமறுக்கிறார்கள்... மக்களைச் சொல்லி தப்பில்லை..! போலி வைத்தியர்கள் நிறைய இருப்பதால், நல்ல மருத்துவர்கள் இருட்டடிக்கபடுகிறார்கள்.

நம் ஊர் மருத்துவ முறைகள் பின்தங்கிப் போனதுக்கு முக்கியமான காரணமாக நான் நினைப்பது, பரம்பரை மருத்துவம் என்று ஒவ்வொரு தாத்தாகளும் தன் மகன்களிடமும், பேரன்களிடமும் மட்டும்தான் இந்த மருத்துவக்குறிப்புகளை ஒப்படைப்பேன் என்று வீம்பு பிடித்ததுதான். இப்படி வீம்பு பிடித்த தாத்தாக்களால் எத்தனையோ அறிய மருத்துவக் குறிப்புகள் ம(ற)றைந்து போயிற்று. ஆனால், அந்த காலத்து மருத்துவ முன்னோடிகளாக இருந்த எகிப்தியர்கள், எல்லாக் குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டதால் இன்றளவும் அது நமக்கு உதவுகிறது.

நல்லவேளையாக அக்குபஞ்சர் தப்பிப் பிழைத்து இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பல பேர் இன்றைக்கு ஆபரேஷன் இல்லாமல் பல சிக்கலகளை இந்த அக்குபஞ்சர் முறையில தன்னை குணப்படுத்திக்கிட்டு வருகிறார்கள்.

அதெப்படி மருந்து மாத்திரையிலும், ஆபரேஷன் பண்ணியும் குணமாக்ககூடிய வியாதி ஒரு சின்ன ஊசியினால குணமாகிவிடும் என்று, நாம் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். நியாயமான சந்தேகம்தான்!

நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவமுறையின் சாராம்சம்.

நம் உடம்பிலுள்ள எல்லா பாகங்களிலும், ஒவ்வொரு உறுப்புக்கான அக்குபஞ்சர் புள்ளிகள் உண்டு. அந்த அக்குபஞ்சர் புள்ளிகளிருக்கும் சரியான இடத்தில்,  ஊசிகுத்தப்படும்போது, அந்தந்த உறுப்புக்கான புள்ளிகள் ஸ்டிமுலேட் ஆகும்.  நம் உடம்பிற்குள் QI('ச்சீ' என்று படிக்கவும்) எனர்ஜி என்று ஒன்று உண்டு, அந்த எனர்ஜியை ஊசியின் ஸ்டீமுலேஷனால் செயல்படுத்தி குறிப்பிட்ட உறுப்பிற்கு செலுத்தி குணமடையச் செய்ய வைப்பதுதான் அக்குபஞ்சர் மருத்துவம்.

அக்குபஞ்சர் ஊசிகளின் அம்சங்கள்
எந்த ஒரு குண்டூசியையும் இந்த மருத்துவத்துக்கு பயன்படுத்தலாம் என்று யாரும் தயவு செய்து முயன்றுவிடவேண்டாம். அது மிகவும் ஆபத்து. அக்குபஞ்சருக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஊசிகளை மட்டுமே சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பொதுவாக, அக்குபஞ்சர் ஊசி 0.5 இன்ச்சிலிருந்து 7 இன்ச்வரை கிடைக்கிறது.

இந்த ஊசிகளில் சிரெஞ்ஜ் போல் துளைகளிருக்காது. அதனால் இந்த ஊசிகளுக்குள் இரத்தம் தங்காது. எனவே, இரத்தத்தின்மூலம் பரவும் STD போன்ற வியாதிகள் இந்த ஊசிகளினால் பரவாது என்பது நல்ல விஷயம். இருந்தாலும், ஒருவருக்கு உபயோகிக்கப்படும் அக்குபஞ்சர் ஊசிகள் அடுத்தவருக்கு பெரும்பாலும் உபயோகிப்பதில்லை.

சைனா, இலங்கை போன்ற நாடுகளில் 7 இன்ச் அக்குபஞ்சர் ஊசிகளை ஆபரேஷன் செய்வதற்குமுன் மயக்கமருந்திற்கு பதிலாக மயக்கம் வரவழைக்க உபயோகிக்கிறார்கள். அதேபோல், பிரசவத்தின்போது, ஒரு இன்ச் அக்குபஞ்சர் ஊசிகளை உபயோகித்து, வலியில்லாமல் குழந்தைபிறக்க செய்கிறார்கள். இப்படி இதன் பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

அக்குபஞ்சர் ஊசிகள் காப்பர், வெள்ளி, தங்கம் என்று வெவ்வேறு உலோகங்களில் கிடைக்கிறது.

எத்தனை ஊசிகள் உடம்பில் குத்தப்படும்?
ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பதுபோல், நோய்க்கு தகுந்தபடி ஊசிகளின் எண்ணிக்கையை கூட்டியும் குறைத்தும் உபயோகிக்கப்படும். உதாரணத்திற்கு தலைவலி, உடல்வலிக்கு 4 ஊசிகள் போடப்படும். சாதாரண ஜூரத்தில் வாடும் ஒருவருக்கு 3 நாட்களுக்கு சுமார் 7 ஊசிகள் என்று போடலாம்.

நம் ஊரிலுள்ள பெண்களுக்கு, நமது முன்னோர்கள் அக்குபஞ்சர் மருத்துவமுறையை மறைமுகமாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா..? ஆம், இதோ உதாரணம்...
  • ஒரு பெண் தனது காதுகளில் கம்மல் மாட்டுவதால், EARPOINT இயக்கப்படுகிறது, இது கண்பார்வைக்கு நல்லது.

  • மூக்கு-குத்தி அணிவதால், LI-20 Ying Xiang என்ற அக்கு பாய்ண்டுகள் இயக்கப்படுகிறது. இதனால் கன்னங்களில் டொக்கு விழாது, முகம் தெளிவாகத் இருக்கும். மேலும், பெண்களுக்கு உடம்பில் நளினங்கள் கொடுக்கும் ஹார்மோன்களை சீராகச் சுரக்கச் செய்யும்.

  • நெத்திச்சுட்டி அணியும்போது நடுமண்டையிலிருக்கும் DU-20 Baihui என்ற பாய்ண்டானது இயக்கப்படுகிறது, இது உடம்பிலுள்ள எல்லா பாகங்களுக்கும் நல்லது. இதை KING OF ALL POINTS என்று சொல்வார்கள்.

  • நெற்றிக்கு கொஞ்சம் கீழே, இரண்டு புருவங்களுக்கு மத்தியிலிருக்குமிடத்தை ஸ்பெஷல் பாய்ண்ட் என்பார்க்ள். இங்கு ஸ்டிமுலேட் செய்வதால் ஞாபகசக்தி அதிகமாகும், சுருக்கங்கள் விழுவது குறையும்.. இங்கு நம்மூர் பெண்கள் கைவிரலால் அழுந்தத்தேய்த்து பொட்டு வைப்பதாலும் இந்த பாய்ண்ட் ஸ்டிமுலேட் ஆகும்.

  • கொலுசு அணிவதால், K3 அல்லது TAIXI என்ற பாய்ண்ட் ஸ்டிமுலேட் ஆகி, கொலுசு அணிபவரின் கிட்னி நல்லமுறையில் இயங்க உறுதுணையளிக்கும்

இப்படி நம் நாட்டு பெண்கள் சம்பிரதாயத்துக்காக அணியும் ஆபரணங்களும், செய்துக்கொள்ளும் அலங்காரங்களும் அவர்களது உடம்பை நல்ல முறையில் பராமரிக்க உதவுகிறது.

அதுமட்டுமல்ல, உங்களுக்கு இன்னொரு ஆச்சர்யமான விஷயம் தெரியுமா..! இந்தத் தொடரைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு, ஏற்கனவே அக்குபஞ்சர் தெரியும் என்று சொன்னால் உங்களால் நம்பமுடியுமா..? உண்மைதான்...

அது எப்படி என்று அடுத்த வாரம் பார்க்கலாமே..!

இந்த வார டிப்ஸ்
ஒருவருக்கு வாந்திவருவது போல் இருந்தால், அவர்களின் இடது அல்லது வலது கை மணிக்கட்டுக்கு கீழே 3 விரல்களால் பிடித்து மிதமாக அழுத்தம் கொடுக்க, வாந்தி வருவது நின்று போகும்.

இந்த வார Quote
ONE SMALL NEEDLE CURES A THOUSAND ILLNESS
                                                              - ANCIENT CHINESE SAYINGS


(தொடரும்...)

Sunday, March 14, 2010

PIN விளைவுகள் - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை - 1


டிஸ்கி: அக்குபஞ்சர் பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காக எழுதுகிறேனே தவிர, எழுத்துக்கும் வலைப்பதிவிற்கும் நான் புதியவன் என்பதால் என் எழுத்துப்பிழைகளை பொறுத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------

"அக்குபஞ்சர்"னா என்ன..?

இந்த கேள்விக்கு நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரே விஷயம், ஊசியால உடம்பெல்லாம் குத்துவாங்க அப்படிங்கிறதுதான்...

டாக்டர்கிட்ட போனா ஊசி போடுவாரேங்கிற ஒரே காரணத்துக்காக, மெடிக்கல் ஷாப்புல க்ரோஸின் வாங்கி சாப்பிட்டுட்டு, வீட்ல ரசம் சாதம் சாப்பிட்டுக்கிட்டு ஜூரத்தை சமாளிக்கிற நமக்கு... உடம்பெல்லாம் ஊசி போடுற மருத்துவம்னா யோசிச்சு பாக்கவே கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.

ஆனா, நீங்க நினைக்கிற மாதிரி டாக்டர் போடுற சிரெஞ்சு அளவுக்கு கையில 45 டிகிரி ஆங்கிள்லயும், இடுப்புல 90 டிகிரி ஆங்கிள்லயும், உடம்புக்குள்ள ஒரு செ.மீ. ஊடுருவுற ஊசியில்லைங்க இது...

இந்த அக்குபஞ்சர் ஊசி, உங்க உடம்புல 0.2 mm மட்டும்தான் உள்ள போகும், ரொம்ப வலிக்காது. 

விளக்கம்
அக்குஸ் - என்றால் கூர்மையான ஊசி என்றும் பஞ்சர் - என்றால்... உங்களுக்கே தெரியும்! 'ஊசிமருத்துவம்' அப்படின்னும் வச்சிக்கலாம். 'அக்குபஞ்சர்'ங்கிறது லத்தீன் மொழியிலருந்து மருவி வந்த வார்த்தை.

நான் 2003ஆம் ஆண்டு,  Physio Therapy படிச்சிட்டிருந்தப்போ, என்னோட பார்ட் டைம் கோர்ஸா அக்குபஞ்சர் படிக்கிறதுக்காக அம்பத்தூர்ல இருந்த Late Dr. Manohar அவருகிட்ட மாணவனா சேர்ந்தேன். என்னோட முதல் வகுப்புல எனக்கு ஆச்சர்யமளிச்ச விஷயம் என்னன்னா, அவரு ஒரு MBBS Doctor. ஆனா, அக்குபஞ்சர் மட்டும்தான் ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டிருந்தாரு. இதுவரைக்கும் (2003ல்) 30,000 பேஷண்டுகளை குணப்படுத்தியிருக்காரு. இந்தியாவிலருந்து சைனாவுக்கு போய் அக்குபஞ்சர் படிச்ச முதல் 10 இந்தியர்கள்ல இவரும் ஒருத்தர்.

வரலாறு
சைனீஸ் ஆரம்பகாலத்துல இந்த மருத்துவ முறையை ஊசி போல் செதுக்கிய கல்லினாலும், எலும்புகளாலும் செயல்படுத்தியிருக்காங்க... ஆனா, அதுல அவங்களுக்கு கிட்டிய பலன் கம்மிதான். இந்தியாவின் வர்மக்கலையில் உபயோகிக்கப்படும் வர்மா புள்ளிகளை சைனீஸ்காரர்கள் இந்த அக்குபஞ்சர் முறையில செயல்படுத்த ஆரம்பிச்சதும் அமோக வெற்றி கிட்டியிருக்கு..! இதுக்கப்புறம் இந்த மருத்துவமுறை ரொம்ப மேன்மை அடைஞ்சிருக்கு. இதை காப்பின்னு சொல்லமுடியாது. இப்ப... நாம அவங்க சைனீஸ் சால்ட்டை உபயோகப்படுத்தி நம்ம உணவு வகைகளின் சுவையை கூட்டிக்கிறதில்லையா அந்தமாதிரித்தான்.

ALL ACUPUNTURE POINTS ARE VARMA POINTS
BUT NOT ALL VARMA POINTS ARE ACUPUNCTURE POINTS


எது எப்படியோ! உலகத்துக்கு ஒரு நல்ல மருத்துவ முறை கிடைச்சதுல இந்தியர்களும் சைனீஸ்காரர்களுக்கும் இதர உலகத்தவர்க்கும் சந்தோஷம்தான்.

அக்குபஞ்சர் மருத்துவத்தில் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா, இதுல Side Effects என்பதே கிடையாது. அதுமட்டுமில்ல, நம்ம ஊரின் மற்ற மருத்துவமுறைகளான ஆயுர்வேதா, சித்தா போன்ற முறைகள்லயும் Side Effects கிடையாது. ஆனா, Allopathy (English Medicine) மருந்துகள் எல்லாத்துக்குமே Side Effects உண்டு. இதுக்கு ஒரு உதாரணம் சொல்லணும்னா, "Paracetamol" உள்ள மாத்திரையை அதிகமா சாப்பிட்டா, லிவர் பாதிக்கபடுதுன்னு சொல்றாங்க. ஆனா, என்ன ஒண்ணு... Allopathyயில் உடனடி நிவாரணம்..! இதைத்தான் பலரும் விரும்புறாங்க..! அதனால Allopathy ஓங்கி நிக்குது. நம்ம ஊரு மருத்துவ முறைகள்லாம் பின்தங்கியிருக்கு. தயவு செஞ்சி Allopathy மருத்துவர்கள் யாரும் தவறா எடுத்துக்க வேண்டாம். நம்ம ஊரு மருத்துவ முறைகளை(யும்) ஒதுக்கிடாதீங்கிறதுக்காக இதை சொல்றேன்.

அக்குபஞ்சரில் எளிதில் குணமடையக்கூடிய வியாதிகள்
அக்குபஞ்சர் முறைப்படி கீழ்காணும் வியாதிகளை குணப்படுத்தலாம்:
குடிப்பழக்கம், எலும்பு தேய்வு, ஆஸ்துமா, முதுகுவலி, இரத்தக்கொதிப்பு, சக்கரை வியாதி, காது, கண், வாய், பொது வலி, சிறுநீரக கோளாறுகள்,  சிறுநீரகத்தில் கல், தலைவலிகள், தசைப்பிடிப்புகள், மூளை கோளாறுகள், பாலியல் பிரச்சினைகள், சைனஸ், தோல் வியாதிகள், தைராய்டு மற்று வீசிங் பிரச்சினைகள் போன்ற வியாதிகளை அக்குபஞ்சர் முறைப்படி எளிதில் குணப்படுத்த முடிகிறது.

இந்த வார டிப்ஸ்
யாராவது திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்கன்னா(இது அழகில் மயங்கி விழுபவர்களுக்கான டிப்ஸ் அல்ல!), அவங்க மூக்கிற்கு கீழே, மீசை முளைக்கும் ஏரியாவின் நடுமையத்தில், ஏதாவது ஒரு அதிகம் கூர்மையில்லாத பொருளால் மிதமாக அழுத்தித் தேய்க்க அவர்களுக்கு விழிப்பு வந்துவிடும்.

Quotes about Acupunture
''IF YOU CANNOT BE THE KING
BE A HEALER''
                                                        - ANCIENT SINHALA MANUSCRIPT OF 500 BC

மீண்டும் பகுதி - II ல அடுத்த வாரம் உங்களை சந்திக்கிறேன்...

நன்றி..!