Sunday, March 21, 2010

PIN விளைவுகள் - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை - 2


டிஸ்கி: அக்குபஞ்சர் பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காக எழுதுகிறேனே தவிர, எழுத்துக்கும் வலைப்பதிவிற்கும் நான் புதியவன் என்பதால் என் எழுத்துப்பிழைகளை பொறுத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------

ப்பாளி இலையை சாப்பிட்டால், கேன்ஸர் உண்டாக்கிற செல்ஸ் குறையுமென்று, கடந்த மார்ச் 11ஆம்(2010) தேதி தினகரன் பேப்பரில் படித்தேன். இந்த விஷயத்தை, 13 வருஷமாக ஒரு மருத்துவர் FLORIDAவுல ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடித்திருக்கிறார். இதே விஷயத்தை ஒரு பரம்பரை சித்த வைத்தியர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். ஆனால், அவர் சொன்னது தினகரனில் வரவில்லை. என்ன செய்ய..! யாரோ ஒருத்தர் ஃபாரினில் சொன்னால் கேட்கிறார்கள், நம் பக்கத்து தெரு வைத்தியர் சொன்னால் நம்பமறுக்கிறார்கள்... மக்களைச் சொல்லி தப்பில்லை..! போலி வைத்தியர்கள் நிறைய இருப்பதால், நல்ல மருத்துவர்கள் இருட்டடிக்கபடுகிறார்கள்.

நம் ஊர் மருத்துவ முறைகள் பின்தங்கிப் போனதுக்கு முக்கியமான காரணமாக நான் நினைப்பது, பரம்பரை மருத்துவம் என்று ஒவ்வொரு தாத்தாகளும் தன் மகன்களிடமும், பேரன்களிடமும் மட்டும்தான் இந்த மருத்துவக்குறிப்புகளை ஒப்படைப்பேன் என்று வீம்பு பிடித்ததுதான். இப்படி வீம்பு பிடித்த தாத்தாக்களால் எத்தனையோ அறிய மருத்துவக் குறிப்புகள் ம(ற)றைந்து போயிற்று. ஆனால், அந்த காலத்து மருத்துவ முன்னோடிகளாக இருந்த எகிப்தியர்கள், எல்லாக் குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டதால் இன்றளவும் அது நமக்கு உதவுகிறது.

நல்லவேளையாக அக்குபஞ்சர் தப்பிப் பிழைத்து இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பல பேர் இன்றைக்கு ஆபரேஷன் இல்லாமல் பல சிக்கலகளை இந்த அக்குபஞ்சர் முறையில தன்னை குணப்படுத்திக்கிட்டு வருகிறார்கள்.

அதெப்படி மருந்து மாத்திரையிலும், ஆபரேஷன் பண்ணியும் குணமாக்ககூடிய வியாதி ஒரு சின்ன ஊசியினால குணமாகிவிடும் என்று, நாம் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். நியாயமான சந்தேகம்தான்!

நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவமுறையின் சாராம்சம்.

நம் உடம்பிலுள்ள எல்லா பாகங்களிலும், ஒவ்வொரு உறுப்புக்கான அக்குபஞ்சர் புள்ளிகள் உண்டு. அந்த அக்குபஞ்சர் புள்ளிகளிருக்கும் சரியான இடத்தில்,  ஊசிகுத்தப்படும்போது, அந்தந்த உறுப்புக்கான புள்ளிகள் ஸ்டிமுலேட் ஆகும்.  நம் உடம்பிற்குள் QI('ச்சீ' என்று படிக்கவும்) எனர்ஜி என்று ஒன்று உண்டு, அந்த எனர்ஜியை ஊசியின் ஸ்டீமுலேஷனால் செயல்படுத்தி குறிப்பிட்ட உறுப்பிற்கு செலுத்தி குணமடையச் செய்ய வைப்பதுதான் அக்குபஞ்சர் மருத்துவம்.

அக்குபஞ்சர் ஊசிகளின் அம்சங்கள்
எந்த ஒரு குண்டூசியையும் இந்த மருத்துவத்துக்கு பயன்படுத்தலாம் என்று யாரும் தயவு செய்து முயன்றுவிடவேண்டாம். அது மிகவும் ஆபத்து. அக்குபஞ்சருக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஊசிகளை மட்டுமே சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பொதுவாக, அக்குபஞ்சர் ஊசி 0.5 இன்ச்சிலிருந்து 7 இன்ச்வரை கிடைக்கிறது.

இந்த ஊசிகளில் சிரெஞ்ஜ் போல் துளைகளிருக்காது. அதனால் இந்த ஊசிகளுக்குள் இரத்தம் தங்காது. எனவே, இரத்தத்தின்மூலம் பரவும் STD போன்ற வியாதிகள் இந்த ஊசிகளினால் பரவாது என்பது நல்ல விஷயம். இருந்தாலும், ஒருவருக்கு உபயோகிக்கப்படும் அக்குபஞ்சர் ஊசிகள் அடுத்தவருக்கு பெரும்பாலும் உபயோகிப்பதில்லை.

சைனா, இலங்கை போன்ற நாடுகளில் 7 இன்ச் அக்குபஞ்சர் ஊசிகளை ஆபரேஷன் செய்வதற்குமுன் மயக்கமருந்திற்கு பதிலாக மயக்கம் வரவழைக்க உபயோகிக்கிறார்கள். அதேபோல், பிரசவத்தின்போது, ஒரு இன்ச் அக்குபஞ்சர் ஊசிகளை உபயோகித்து, வலியில்லாமல் குழந்தைபிறக்க செய்கிறார்கள். இப்படி இதன் பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

அக்குபஞ்சர் ஊசிகள் காப்பர், வெள்ளி, தங்கம் என்று வெவ்வேறு உலோகங்களில் கிடைக்கிறது.

எத்தனை ஊசிகள் உடம்பில் குத்தப்படும்?
ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பதுபோல், நோய்க்கு தகுந்தபடி ஊசிகளின் எண்ணிக்கையை கூட்டியும் குறைத்தும் உபயோகிக்கப்படும். உதாரணத்திற்கு தலைவலி, உடல்வலிக்கு 4 ஊசிகள் போடப்படும். சாதாரண ஜூரத்தில் வாடும் ஒருவருக்கு 3 நாட்களுக்கு சுமார் 7 ஊசிகள் என்று போடலாம்.

நம் ஊரிலுள்ள பெண்களுக்கு, நமது முன்னோர்கள் அக்குபஞ்சர் மருத்துவமுறையை மறைமுகமாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா..? ஆம், இதோ உதாரணம்...
  • ஒரு பெண் தனது காதுகளில் கம்மல் மாட்டுவதால், EARPOINT இயக்கப்படுகிறது, இது கண்பார்வைக்கு நல்லது.

  • மூக்கு-குத்தி அணிவதால், LI-20 Ying Xiang என்ற அக்கு பாய்ண்டுகள் இயக்கப்படுகிறது. இதனால் கன்னங்களில் டொக்கு விழாது, முகம் தெளிவாகத் இருக்கும். மேலும், பெண்களுக்கு உடம்பில் நளினங்கள் கொடுக்கும் ஹார்மோன்களை சீராகச் சுரக்கச் செய்யும்.

  • நெத்திச்சுட்டி அணியும்போது நடுமண்டையிலிருக்கும் DU-20 Baihui என்ற பாய்ண்டானது இயக்கப்படுகிறது, இது உடம்பிலுள்ள எல்லா பாகங்களுக்கும் நல்லது. இதை KING OF ALL POINTS என்று சொல்வார்கள்.

  • நெற்றிக்கு கொஞ்சம் கீழே, இரண்டு புருவங்களுக்கு மத்தியிலிருக்குமிடத்தை ஸ்பெஷல் பாய்ண்ட் என்பார்க்ள். இங்கு ஸ்டிமுலேட் செய்வதால் ஞாபகசக்தி அதிகமாகும், சுருக்கங்கள் விழுவது குறையும்.. இங்கு நம்மூர் பெண்கள் கைவிரலால் அழுந்தத்தேய்த்து பொட்டு வைப்பதாலும் இந்த பாய்ண்ட் ஸ்டிமுலேட் ஆகும்.

  • கொலுசு அணிவதால், K3 அல்லது TAIXI என்ற பாய்ண்ட் ஸ்டிமுலேட் ஆகி, கொலுசு அணிபவரின் கிட்னி நல்லமுறையில் இயங்க உறுதுணையளிக்கும்

இப்படி நம் நாட்டு பெண்கள் சம்பிரதாயத்துக்காக அணியும் ஆபரணங்களும், செய்துக்கொள்ளும் அலங்காரங்களும் அவர்களது உடம்பை நல்ல முறையில் பராமரிக்க உதவுகிறது.

அதுமட்டுமல்ல, உங்களுக்கு இன்னொரு ஆச்சர்யமான விஷயம் தெரியுமா..! இந்தத் தொடரைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு, ஏற்கனவே அக்குபஞ்சர் தெரியும் என்று சொன்னால் உங்களால் நம்பமுடியுமா..? உண்மைதான்...

அது எப்படி என்று அடுத்த வாரம் பார்க்கலாமே..!

இந்த வார டிப்ஸ்
ஒருவருக்கு வாந்திவருவது போல் இருந்தால், அவர்களின் இடது அல்லது வலது கை மணிக்கட்டுக்கு கீழே 3 விரல்களால் பிடித்து மிதமாக அழுத்தம் கொடுக்க, வாந்தி வருவது நின்று போகும்.

இந்த வார Quote
ONE SMALL NEEDLE CURES A THOUSAND ILLNESS
                                                              - ANCIENT CHINESE SAYINGS


(தொடரும்...)