Friday, April 23, 2010

PIN விளைவுகள் 5 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை

 டிஸ்கி: அக்குபஞ்சர் பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காக எழுதுகிறேனே தவிர, எழுத்துக்கும் வலைப்பதிவிற்கும் நான் புதியவன் என்பதால் என் எழுத்துப்பிழைகளை பொறுத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------

ம் உடம்பில் ஏற்படும் உபாதைகளை கண்டறிய இப்போது நம்வசம் நவீன கருவிகள் உள்ளது. X-Ray, Scanning, ECG, Endoscopy, Colonoscopy இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இதெல்லாம் தற்கால நவீன மருத்துவமுறைகளில் கண்டுபிடிக்கப்பட்டவையேயன்றி இயற்கை நமக்கென்று கொடுத்திருப்பது இரண்டு கண்கள் மட்டுமே. இதன்மூலம் நம் உடம்பிற்குள் ஊடுருவி பார்க்க இயலாது என்ற காரணத்தினால்தான் மேற்குறிப்பிட்ட கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இதுபோன்ற நவீன கருவிகள் இல்லாமலே நாம் நமது உடம்பின் அடிப்படை உபாதைகளை எளிதில் கண்டுபிடிக்கலாம். அதற்கு அக்குபிரஷர் பாய்ண்டுகள் உதவுகின்றது.

'உன் வாழ்க்கை உன் கையில்' என்ற சொல்வடையை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது எங்கு பொருந்துகிறதோ இல்லையோ, இந்த அக்குபிரஷர் முறைக்கு மிகவும் பொறுந்தும். ஆம்... உள்ளங்கையும் அதன் சுற்றுப்புறத்திலும்தான் நம் உடம்பின் பெரும்பாலான உறுப்பக்களுக்கான பிரஷர்பாய்ண்டுகள் இருக்கின்றன.

சரி, இப்போது சில அடிப்படை உபாதைகளை நம் உள்ளங்கையில் எப்படி அறிவது என்பதை பார்ப்போம்.

(குறிப்பு : இந்த பிரஷர்கள் கண்டறிய இடது கை, வலது கை என்ற பேதமில்லாமல், இருகைகளையும் உபயோகப்படுத்தலாம். மிகவும் ஆழ்ந்து அறிய பயன்படும் சில குறிப்பிட்ட பாய்ண்டுகளைத் தவிர மற்ற பிரஷர் பாய்ண்ட்டுகள் இருகைகளுக்கும் பொதுவானவை..)

கிட்னி சம்மந்தமான உபாதைகள் கண்டறிய
சிறுநீர் கழிக்கும்போது சிரமம் தெரியும். அடிவயிறு முட்டி சிறுநீர் கழிக்க தோன்றினாலும், கழிக்கும்போது முழுவதாக வெளியேறாமல், கொஞ்சமாகவே வெளியேறும். அதிக எரிச்சல் இருக்கும். குறியில் வலி தெரியும். எப்பொழுதும் அடிமுதுகில் இடது அல்லது வலது அல்லது இருபக்கமும் ஊசிகுத்துவது போல் வலி இருந்துக்கொண்டே இருக்கும். மேற்குறிப்பிட்ட எல்லா அறிகுறிகளும் இருப்பவர்கள். இது  கிட்னி உபாதைகள்தானா என்று ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள, கீழே உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிகப்பு புள்ளிகளுள்ள இடத்தில் அழுத்திப் பார்க்க, அதிக வலி ஏற்பட்டால், கிட்னியில் சம்மந்தமான உபாதைகள் என்று தெரிந்துக் கொள்ளலாம்.




கண் சம்மந்தமான உபாதைகள்
கீழே படத்திலுள்ளதுபோல் ஆள்காட்டி விரலிலும் நடுவிரலிலும் (இடது கண்ணுக்கு இடது கையையும், வலது கண்ணுக்கு வலது கையையும் உபயோகிக்கவும்)குறிப்பிடப்பட்டுள்ள புள்ளியில் அழுத்திப்பார்க்க அதிகமான வலி ஏற்பட்டால்,  கண்களில் உபாதைகள் என்று அறிந்துக்கொள்ளலாம்.


பாலியல் சம்மந்தமான உபாதைகள்
கீழே உள்ள இரண்டு படத்திலும் நாடிப்பார்க்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த இரண்டு புள்ளிகளும் படத்தில் எழுதியிருக்கும் உறுப்புக்களை குறிப்பிடுபவை. இந்த புள்ளிகளில் அழுத்திப்பார்க்க வலி ஏற்ப்பட்டால், அந்தந்த உறுப்புகளில் உபாதைகள் உண்டு என்று அறிந்துக்கொள்ளலாம்.























சக்கரை நோய் சம்மந்தமான உபாதைகள்
இந்த சக்கரை நோய் இருப்பதைக்கண்டறிய
1. அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். அதுவும் இரவு வேளைகளில் அதிகமாக சிறுநீர் கழிப்பது. அதுவும் சிறுநீர் வெளியேறும் நேரமும் அதிகமாக இருக்கும்.
2. அதிகமாக பசிக்கும். எவ்வளவு அதிகமாக சாப்பிட்டாலும், விரைவில் பசி ஏற்படும்.
3. அதிகமாக தாகம் எடுக்கும். தண்ணீர் எவ்வளவு குடித்தாலும் தாகம் இருந்துக்கொண்டே இருக்கும்.
4. அடிப்பட்டால், புண்கள் சீக்கிரம் ஆறாது.
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள படத்திலுள்ள புள்ளிகள் இருக்கும் இடத்தில் அழுத்தித் தேய்க்க அதிக வலி உணர்வார்கள்.

 இதுபோல் கைகளில் இருக்கும் பாய்ண்டுகள் இன்னும் அதிகம் உண்டு. ஆனால், சில மருத்துவக் குறிப்புகள் படிக்கும்போது எப்படி சுவாரஸ்யமா இருக்குமோ அதுமாதிரி கொஞ்சம் பயமுறுத்தவும் செய்யும் என்பதால், சில அடிப்படை பாய்ண்டுகளை மட்டுமே கூறியிருக்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம். நம் உடம்பில் எந்த ஒரு பகுதியிலும் ரொம்பவும் அழுத்தினால் வலி ஏற்படவே செய்யும். அந்த வலியை இந்த பாய்ண்டுகளில் ஏற்படும் வலியோ என்று எண்ணி குழம்பிவிடவேண்டாம். இந்த புள்ளிகளில் அழுத்தும்போது அசாதாரணமாக வலி ஏற்பட்டால் மட்டுமே அந்தந்த உறுப்பினைக் குறிக்கும் உபாதைகள் இருப்பதாக அர்த்தம்.

இந்த பகுதியில், கைளில் உள்ள பிரஷர் பாய்ண்டுகளை பார்த்ததுபோல், நமது இரண்டு கையையும் ஒப்பிட்டுப் பார்த்து, நமது உடம்பு சீராக இயங்குகிறதா என்பதை (QI எனர்ஜி ஃப்ளோவை) பார்க்க முடியும். அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

இந்த வார டிப்ஸ்
மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள், தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், 6 க்ளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு, ஒரு மணிநேரம் எதுவும் உண்ணாமல், குடிக்காமல் இருக்க வேண்டும். இப்படி தினமும் செய்துவர, 3 நாட்களிலேயே பலன் தெரியும்.


இந்த வார QUOTE

"The treatments themselves do not 'cure' the condition
  they simply restore the body's self-healing ability."

                                                          - Leon Chaitow

Tuesday, April 6, 2010

PIN விளைவுகள் 4 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை


டிஸ்கி: அக்குபஞ்சர் பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காக எழுதுகிறேனே தவிர, எழுத்துக்கும் வலைப்பதிவிற்கும் நான் புதியவன் என்பதால் என் எழுத்துப்பிழைகளை பொறுத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
ருவர் கிட்னி பிரச்சினை காரணமாக அலோபதி மருத்துவரிடம் சென்று ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளும்போது, முதலில் மருத்துவர் அந்த பேஷண்டிடம் முன்மருத்துவ ரெக்கார்டுகளை (Past Drug History) பற்றி விசாரிப்பார், அதற்கு காரணம், ஏற்கனவே அந்த நபர் வேறு எந்தெந்த மருந்துகளை உட்கொள்கிறார் என்பதை தெரிந்துக் கொள்வது அவருக்கு மிகவும் அவசியம். ஏனென்றால், கிட்னி பிரச்சினைக்காக அவர் பரிந்துரைக்கப்போகும் மருந்தானது, பேஷ்ண்ட் ஏற்கனவே சாப்பிட்டுவரும் மருந்துகளுடன் சேரும்போது ரசாயன மாற்றத்தின் காரணமாக பேஷண்டுக்கு பிரச்சினை ஏற்படாமலிருக்க இந்த பாஸ்ட் மெடிகல் ஹிஸ்ட்ரி தேவைப்படுகிறது. ஆனால், இந்த பிரச்சினை அக்குபஞ்சரில் கிடையாது. நீங்கள் வேறு எந்த மருத்துவ முறைகளையும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும்போதும், அக்குபஞ்சர் மருத்துவமுறையை உங்கள் உடம்பு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும்.

நம் உடம்பில் பிரச்சினை எப்போது வருகிறது தெரியுமா..? இயற்கைக்கு மாறான பழக்கவழக்கங்களை நாம மேற்கொள்கிறபோதுதான். அப்படிப்பட்ட செயல்கள் நம் உள்ளுறுப்புக்களில் கழிவுகளை தேங்கச்செய்கிறது. கழிவுகள் உடலின் எந்த உறுப்பில், எந்த பகுதியில் தேங்குகிறதோ, அங்கு உடம்பு தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது. இதுதான் காலப்போக்கில், ஜூரம், வயிற்றுப்போக்கு இப்படி பல விதங்களாக வெளிப்படுகிறது. உலகத்தில் உள்ள எந்த ஒரு வியாதி ஒருவருக்கு வந்தாலும், அவரது உடம்பு "Red Alert"ஆக்கி காட்டும். உதாரணத்திற்கு Common Fever என்ற ஜூரம் வந்த ஒருவரின் முகம் சிவந்திருப்பதைக் காணலாம். இந்த காரணத்தினால்தான், 'Fever is not a Disease, it is a symptom' என்று சொல்வார்கள்.

Foreign particles-னால் நம் உடல் பாதிக்கப்பட்டுபோது, நம் உடம்பிலிருக்கும் antibodies என்ற நோய் எதிர்ப்பு சக்தி அந்த கிருமிகளை எதிர்த்து போராடும், ஆனால், தாக்குதலில் தோல்வி தழுவும்போது நம் உடலுக்கு மருத்துவம் தேவைப்படுகிறது. மற்ற மருத்துவமுறைகளில் மருந்து மாத்திரைகளால் இந்த antibodiesக்கு சக்தி கூட்டுகிறார்கள். ஆனால், அக்குபஞ்சர், நம் உடம்பிலிருந்து வெவ்வேறு பகுதியிலிருக்கும் சக்தியை கூட்டி நோயெதிர்ப்பை சக்தியை கூட்டுகிறது. இதனால், நோயெதிர்ப்பு சக்தியை மாத்திரை மருந்துகளால் ஏற்றப்படும்போது, வேறு விதமான பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புள்ளதை அக்குபஞ்சர் முறையில் தவிர்க்க முடிகிறது. நான் மற்ற மருத்துவ முறைகளை அடிக்கடி உதாரணம் காட்டுவதற்கு முக்கிய காரணம், பல வருடமாக நமது மக்கள் வேற்று மருத்துவமுறைகளை உபயோகித்து அதன் அடிப்படைகளை அறிந்திருப்பதால் மட்டுமே. இப்படி ஒப்பிட்டு காட்டுவது சுலபமாக மக்களுக்கு சென்றடையவைக்கும் நோக்கமே தவிர, மற்ற மருத்துவமுறைகளை மட்டம் தட்டுவதற்க்கல்ல..! ஒவ்வொரு மருத்துவமுறைகளிலும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்பதை என்னையும் சேர்த்து எல்லா மருத்துவர்களும் உணர்ந்தவர்களே என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

நம் உடம்பில் பிரச்சினை எங்கு எந்த இடத்தில் உள்ளது என்பதை கண்டறிய Scanning, X-Ray போன்ற கருவிகள் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். இந்த கருவியில் நாம் சோதித்துக் கொள்ள சில நூறு ரூபாய்களையாவது செலவிட வேண்டியிருக்கும். ஆனால், இந்த கருவிகள் இல்லாமல் நாம் நம் உடம்பில் உள்ள பிரச்சினைகளை தெரிந்துக் கொள்ள முடியும்... எப்படி..? அடுத்த பகுதியில் பார்ப்போம்..!

இந்த வார டிப்ஸ்
ஆஸ்துமா வீஸிங் போன்ற பிரச்சினைகளுள்ள பேஷ்ண்டுகளுக்கான டிப்ஸ் ஒன்றை கூறுகிறேன். இவர்களுக்கு மூச்சுவிடமுடியாதபடி பிரச்சினை ஏற்படும்போது, அவர்களின் அடித்தொண்டையின் கீழே உள்ள குழியில் (பெரும்பாலும் மூச்சு இழுக்கும்போது இந்த குழி நன்றாக புலப்படும்) மூச்சு இழுக்கும்போது, நகம்படாமல் கட்டைவிரலால் ரேகை படுவதுபோல் நன்றாக அழுத்திக் கொடுக்க, மூச்சுவிடுதல் சீராகும்.

இந்த வார QUOTE
 "It is more important to know what sort of person has a disease 
  than to know what sort of disease a person has."
                                                                           -Hippocrates (460-377 B.C.)

(தொடரும்...)