டிஸ்கி: அக்குபஞ்சர் பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காக எழுதுகிறேனே தவிர, எழுத்துக்கும் வலைப்பதிவிற்கும் நான் புதியவன் என்பதால் என் எழுத்துப்பிழைகளை பொறுத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
நம் உடம்பில் ஏற்படும் உபாதைகளை கண்டறிய இப்போது நம்வசம் நவீன கருவிகள் உள்ளது. X-Ray, Scanning, ECG, Endoscopy, Colonoscopy இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இதெல்லாம் தற்கால நவீன மருத்துவமுறைகளில் கண்டுபிடிக்கப்பட்டவையேயன்றி இயற்கை நமக்கென்று கொடுத்திருப்பது இரண்டு கண்கள் மட்டுமே. இதன்மூலம் நம் உடம்பிற்குள் ஊடுருவி பார்க்க இயலாது என்ற காரணத்தினால்தான் மேற்குறிப்பிட்ட கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இதுபோன்ற நவீன கருவிகள் இல்லாமலே நாம் நமது உடம்பின் அடிப்படை உபாதைகளை எளிதில் கண்டுபிடிக்கலாம். அதற்கு அக்குபிரஷர் பாய்ண்டுகள் உதவுகின்றது.
'உன் வாழ்க்கை உன் கையில்' என்ற சொல்வடையை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது எங்கு பொருந்துகிறதோ இல்லையோ, இந்த அக்குபிரஷர் முறைக்கு மிகவும் பொறுந்தும். ஆம்... உள்ளங்கையும் அதன் சுற்றுப்புறத்திலும்தான் நம் உடம்பின் பெரும்பாலான உறுப்பக்களுக்கான பிரஷர்பாய்ண்டுகள் இருக்கின்றன.
சரி, இப்போது சில அடிப்படை உபாதைகளை நம் உள்ளங்கையில் எப்படி அறிவது என்பதை பார்ப்போம்.

(குறிப்பு : இந்த பிரஷர்கள் கண்டறிய இடது கை, வலது கை என்ற பேதமில்லாமல், இருகைகளையும் உபயோகப்படுத்தலாம். மிகவும் ஆழ்ந்து அறிய பயன்படும் சில குறிப்பிட்ட பாய்ண்டுகளைத் தவிர மற்ற பிரஷர் பாய்ண்ட்டுகள் இருகைகளுக்கும் பொதுவானவை..)
கிட்னி சம்மந்தமான உபாதைகள் கண்டறிய
சிறுநீர் கழிக்கும்போது சிரமம் தெரியும். அடிவயிறு முட்டி சிறுநீர் கழிக்க தோன்றினாலும், கழிக்கும்போது முழுவதாக வெளியேறாமல், கொஞ்சமாகவே வெளியேறும். அதிக எரிச்சல் இருக்கும். குறியில் வலி தெரியும். எப்பொழுதும் அடிமுதுகில் இடது அல்லது வலது அல்லது இருபக்கமும் ஊசிகுத்துவது போல் வலி இருந்துக்கொண்டே இருக்கும். மேற்குறிப்பிட்ட எல்லா அறிகுறிகளும் இருப்பவர்கள். இது கிட்னி உபாதைகள்தானா என்று ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள, கீழே உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிகப்பு புள்ளிகளுள்ள இடத்தில் அழுத்திப் பார்க்க, அதிக வலி ஏற்பட்டால், கிட்னியில் சம்மந்தமான உபாதைகள் என்று தெரிந்துக் கொள்ளலாம்.
கண் சம்மந்தமான உபாதைகள்
கீழே படத்திலுள்ளதுபோல் ஆள்காட்டி விரலிலும் நடுவிரலிலும் (இடது கண்ணுக்கு இடது கையையும், வலது கண்ணுக்கு வலது கையையும் உபயோகிக்கவும்)குறிப்பிடப்பட்டுள்ள புள்ளியில் அழுத்திப்பார்க்க அதிகமான வலி ஏற்பட்டால், கண்களில் உபாதைகள் என்று அறிந்துக்கொள்ளலாம்.

பாலியல் சம்மந்தமான உபாதைகள்
கீழே உள்ள இரண்டு படத்திலும் நாடிப்பார்க்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த இரண்டு புள்ளிகளும் படத்தில் எழுதியிருக்கும் உறுப்புக்களை குறிப்பிடுபவை. இந்த புள்ளிகளில் அழுத்திப்பார்க்க வலி ஏற்ப்பட்டால், அந்தந்த உறுப்புகளில் உபாதைகள் உண்டு என்று அறிந்துக்கொள்ளலாம்.

சக்கரை நோய் சம்மந்தமான உபாதைகள்
இந்த சக்கரை நோய் இருப்பதைக்கண்டறிய
1. அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். அதுவும் இரவு வேளைகளில் அதிகமாக சிறுநீர் கழிப்பது. அதுவும் சிறுநீர் வெளியேறும் நேரமும் அதிகமாக இருக்கும்.
2. அதிகமாக பசிக்கும். எவ்வளவு அதிகமாக சாப்பிட்டாலும், விரைவில் பசி ஏற்படும்.
3. அதிகமாக தாகம் எடுக்கும். தண்ணீர் எவ்வளவு குடித்தாலும் தாகம் இருந்துக்கொண்டே இருக்கும்.
4. அடிப்பட்டால், புண்கள் சீக்கிரம் ஆறாது.
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள படத்திலுள்ள புள்ளிகள் இருக்கும் இடத்தில் அழுத்தித் தேய்க்க அதிக வலி உணர்வார்கள்.

இதுபோல் கைகளில் இருக்கும் பாய்ண்டுகள் இன்னும் அதிகம் உண்டு. ஆனால், சில மருத்துவக் குறிப்புகள் படிக்கும்போது எப்படி சுவாரஸ்யமா இருக்குமோ அதுமாதிரி கொஞ்சம் பயமுறுத்தவும் செய்யும் என்பதால், சில அடிப்படை பாய்ண்டுகளை மட்டுமே கூறியிருக்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம். நம் உடம்பில் எந்த ஒரு பகுதியிலும் ரொம்பவும் அழுத்தினால் வலி ஏற்படவே செய்யும். அந்த வலியை இந்த பாய்ண்டுகளில் ஏற்படும் வலியோ என்று எண்ணி குழம்பிவிடவேண்டாம். இந்த புள்ளிகளில் அழுத்தும்போது அசாதாரணமாக வலி ஏற்பட்டால் மட்டுமே அந்தந்த உறுப்பினைக் குறிக்கும் உபாதைகள் இருப்பதாக அர்த்தம்.
இந்த பகுதியில், கைளில் உள்ள பிரஷர் பாய்ண்டுகளை பார்த்ததுபோல், நமது இரண்டு கையையும் ஒப்பிட்டுப் பார்த்து, நமது உடம்பு சீராக இயங்குகிறதா என்பதை (QI எனர்ஜி ஃப்ளோவை) பார்க்க முடியும். அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள், தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், 6 க்ளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு, ஒரு மணிநேரம் எதுவும் உண்ணாமல், குடிக்காமல் இருக்க வேண்டும். இப்படி தினமும் செய்துவர, 3 நாட்களிலேயே பலன் தெரியும்.
இந்த வார QUOTE
"The treatments themselves do not 'cure' the condition
they simply restore the body's self-healing ability."
- Leon Chaitow
14 comments:
இதுவரை அறியாத தகவல்கள்......வியப்பாக இருக்கின்றது.. தொடருங்கள்..
நன்றி நாடோடி சார், தொடர்ந்து வந்து ஆதரவு தருவது மகிழ்ச்சியாய் உள்ளது.
Thanks Dr.
எனக்கு கழுத்து வலி அதிகமாக இருக்கிறது. என்ன செய்யலாம்? (கழுத்தை வெட்டி விடுவதை தவிர)
நன்றி ஜீவன்பென்னி, தொடர்ந்து வாருங்கள்...!
மணிஜீ, நீங்கள் தூங்கும்போது இரண்டு அல்லது மூன்று தலையணை வைத்து தூங்குபவராக இருந்தால் தலையணை இல்லாமல் தூங்கிப் பாருங்கள் அதோடு, உள்ளங்கையில் கட்டை விரலின் கீழே அவ்வபோது அழுத்தி கொல்லுங்கள். விரைவில் கழுத்துவலி சரியாகிவிடும். வாழ்த்துக்கள்!
சார். இந்த மலச்சிக்கலுக்கு ஒரு தனிபதிவு போடுங்களேன். புண்ணியமா போகும் உங்களுக்கு.
அக்குபஞ்சர் முறையில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்படவர்களுக்கு ஏதாவது தீர்வு உண்டா
வாங்க ரெண்டு அவர்களே, கண்டிப்பாக விரைவில் மலச்சிக்கல் பற்றி எழுதுகிறேன்.
நல்வரவு ஶ்ரீ, இளம்பிள்ளைவாதம் நோயை குணமாக்குவது என்பது, ஐந்து வயதிலிருந்து எட்டு வயதுக்குள் இருப்பவர்களுக்கே அதிகபட்சம் சாத்தியம். காரணம், பெரியவங்களுக்கு உடல் வளர்ச்சி முழுமையடைந்து விடுவதால் குணமாவதற்கு சாத்தியங்கள் குறைவு. என் குருநாதர் Late. Dr.மனோகர், அவருடைய அனுபவத்தில், இரண்டு குழந்தைகளுக்கு குணமாக்கியிருக்கிறார்.
அருமையான தகவல் டாக்டர்
is there any chance for cure "Motor neurone disease" let me know any thing..
http://en.wikipedia.org/wiki/Motor_neurone_disease
thanks
நன்றி கமல் அவர்களே தொடர்ந்து வாருங்கள்...!
.................
welcome Mr.King MND(Motor Neuron Disease) affects the AHC (Anterior Horn Cell) and it mainly affects the spinal cord & there are many types in MND, a well known example is Parkinson's disease and if motor cells is deficient it also affects the eye creating a condition called Nystagmus & so on of course there is treatment in acupuncture for MND
சிறப்பான பகிர்வு சார்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...
nandri
பயனுள்ள சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
Post a Comment