Sunday, March 14, 2010

PIN விளைவுகள் - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை - 1


டிஸ்கி: அக்குபஞ்சர் பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காக எழுதுகிறேனே தவிர, எழுத்துக்கும் வலைப்பதிவிற்கும் நான் புதியவன் என்பதால் என் எழுத்துப்பிழைகளை பொறுத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------

"அக்குபஞ்சர்"னா என்ன..?

இந்த கேள்விக்கு நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரே விஷயம், ஊசியால உடம்பெல்லாம் குத்துவாங்க அப்படிங்கிறதுதான்...

டாக்டர்கிட்ட போனா ஊசி போடுவாரேங்கிற ஒரே காரணத்துக்காக, மெடிக்கல் ஷாப்புல க்ரோஸின் வாங்கி சாப்பிட்டுட்டு, வீட்ல ரசம் சாதம் சாப்பிட்டுக்கிட்டு ஜூரத்தை சமாளிக்கிற நமக்கு... உடம்பெல்லாம் ஊசி போடுற மருத்துவம்னா யோசிச்சு பாக்கவே கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.

ஆனா, நீங்க நினைக்கிற மாதிரி டாக்டர் போடுற சிரெஞ்சு அளவுக்கு கையில 45 டிகிரி ஆங்கிள்லயும், இடுப்புல 90 டிகிரி ஆங்கிள்லயும், உடம்புக்குள்ள ஒரு செ.மீ. ஊடுருவுற ஊசியில்லைங்க இது...

இந்த அக்குபஞ்சர் ஊசி, உங்க உடம்புல 0.2 mm மட்டும்தான் உள்ள போகும், ரொம்ப வலிக்காது. 

விளக்கம்
அக்குஸ் - என்றால் கூர்மையான ஊசி என்றும் பஞ்சர் - என்றால்... உங்களுக்கே தெரியும்! 'ஊசிமருத்துவம்' அப்படின்னும் வச்சிக்கலாம். 'அக்குபஞ்சர்'ங்கிறது லத்தீன் மொழியிலருந்து மருவி வந்த வார்த்தை.

நான் 2003ஆம் ஆண்டு,  Physio Therapy படிச்சிட்டிருந்தப்போ, என்னோட பார்ட் டைம் கோர்ஸா அக்குபஞ்சர் படிக்கிறதுக்காக அம்பத்தூர்ல இருந்த Late Dr. Manohar அவருகிட்ட மாணவனா சேர்ந்தேன். என்னோட முதல் வகுப்புல எனக்கு ஆச்சர்யமளிச்ச விஷயம் என்னன்னா, அவரு ஒரு MBBS Doctor. ஆனா, அக்குபஞ்சர் மட்டும்தான் ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டிருந்தாரு. இதுவரைக்கும் (2003ல்) 30,000 பேஷண்டுகளை குணப்படுத்தியிருக்காரு. இந்தியாவிலருந்து சைனாவுக்கு போய் அக்குபஞ்சர் படிச்ச முதல் 10 இந்தியர்கள்ல இவரும் ஒருத்தர்.

வரலாறு
சைனீஸ் ஆரம்பகாலத்துல இந்த மருத்துவ முறையை ஊசி போல் செதுக்கிய கல்லினாலும், எலும்புகளாலும் செயல்படுத்தியிருக்காங்க... ஆனா, அதுல அவங்களுக்கு கிட்டிய பலன் கம்மிதான். இந்தியாவின் வர்மக்கலையில் உபயோகிக்கப்படும் வர்மா புள்ளிகளை சைனீஸ்காரர்கள் இந்த அக்குபஞ்சர் முறையில செயல்படுத்த ஆரம்பிச்சதும் அமோக வெற்றி கிட்டியிருக்கு..! இதுக்கப்புறம் இந்த மருத்துவமுறை ரொம்ப மேன்மை அடைஞ்சிருக்கு. இதை காப்பின்னு சொல்லமுடியாது. இப்ப... நாம அவங்க சைனீஸ் சால்ட்டை உபயோகப்படுத்தி நம்ம உணவு வகைகளின் சுவையை கூட்டிக்கிறதில்லையா அந்தமாதிரித்தான்.

ALL ACUPUNTURE POINTS ARE VARMA POINTS
BUT NOT ALL VARMA POINTS ARE ACUPUNCTURE POINTS


எது எப்படியோ! உலகத்துக்கு ஒரு நல்ல மருத்துவ முறை கிடைச்சதுல இந்தியர்களும் சைனீஸ்காரர்களுக்கும் இதர உலகத்தவர்க்கும் சந்தோஷம்தான்.

அக்குபஞ்சர் மருத்துவத்தில் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா, இதுல Side Effects என்பதே கிடையாது. அதுமட்டுமில்ல, நம்ம ஊரின் மற்ற மருத்துவமுறைகளான ஆயுர்வேதா, சித்தா போன்ற முறைகள்லயும் Side Effects கிடையாது. ஆனா, Allopathy (English Medicine) மருந்துகள் எல்லாத்துக்குமே Side Effects உண்டு. இதுக்கு ஒரு உதாரணம் சொல்லணும்னா, "Paracetamol" உள்ள மாத்திரையை அதிகமா சாப்பிட்டா, லிவர் பாதிக்கபடுதுன்னு சொல்றாங்க. ஆனா, என்ன ஒண்ணு... Allopathyயில் உடனடி நிவாரணம்..! இதைத்தான் பலரும் விரும்புறாங்க..! அதனால Allopathy ஓங்கி நிக்குது. நம்ம ஊரு மருத்துவ முறைகள்லாம் பின்தங்கியிருக்கு. தயவு செஞ்சி Allopathy மருத்துவர்கள் யாரும் தவறா எடுத்துக்க வேண்டாம். நம்ம ஊரு மருத்துவ முறைகளை(யும்) ஒதுக்கிடாதீங்கிறதுக்காக இதை சொல்றேன்.

அக்குபஞ்சரில் எளிதில் குணமடையக்கூடிய வியாதிகள்
அக்குபஞ்சர் முறைப்படி கீழ்காணும் வியாதிகளை குணப்படுத்தலாம்:
குடிப்பழக்கம், எலும்பு தேய்வு, ஆஸ்துமா, முதுகுவலி, இரத்தக்கொதிப்பு, சக்கரை வியாதி, காது, கண், வாய், பொது வலி, சிறுநீரக கோளாறுகள்,  சிறுநீரகத்தில் கல், தலைவலிகள், தசைப்பிடிப்புகள், மூளை கோளாறுகள், பாலியல் பிரச்சினைகள், சைனஸ், தோல் வியாதிகள், தைராய்டு மற்று வீசிங் பிரச்சினைகள் போன்ற வியாதிகளை அக்குபஞ்சர் முறைப்படி எளிதில் குணப்படுத்த முடிகிறது.

இந்த வார டிப்ஸ்
யாராவது திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்கன்னா(இது அழகில் மயங்கி விழுபவர்களுக்கான டிப்ஸ் அல்ல!), அவங்க மூக்கிற்கு கீழே, மீசை முளைக்கும் ஏரியாவின் நடுமையத்தில், ஏதாவது ஒரு அதிகம் கூர்மையில்லாத பொருளால் மிதமாக அழுத்தித் தேய்க்க அவர்களுக்கு விழிப்பு வந்துவிடும்.

Quotes about Acupunture
''IF YOU CANNOT BE THE KING
BE A HEALER''
                                                        - ANCIENT SINHALA MANUSCRIPT OF 500 BC

மீண்டும் பகுதி - II ல அடுத்த வாரம் உங்களை சந்திக்கிறேன்...

நன்றி..!

13 comments:

DREAMER said...

வாழ்த்துக்கள் டாக்டர்,
ஒரு வழியா எழுத ஆரம்பிச்சிட்டீங்க... தொடருங்கள். வாழ்த்துக்கள்.

-
DREAMER

Anonymous said...

ஹரீஷ் அவர்கள் மூலமாக உங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். உங்களின் அக்குபஞ்சர் பதிவினைப் படித்தபின் ஒரு வலைப்பதிவிற்க்கு நீங்கள் புதியவரல்ல என்பது போலவே தோன்றுகிறது. உங்கள் பயணம் இனிதே தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பகுதி-2க்காக காத்திருக்கிறேன்! நல்ல பதிவு நன்றி.

Raghu said...

வாழ்த்துக்க‌ள் டாக்ட‌ர், க‌ள‌த்துல‌ இற‌ங்கிட்டீங்க‌, விளையாடுங்க‌ :)

ஒரு சின்ன‌ suggestion, Font color ம‌ட்டும் darkஆ வெச்சீங்க‌ன்னா ப‌திவோட‌ லுக் இன்னும் பெட்ட‌ரா இருக்கும்

And one more thing, த‌மிழ்ம‌ண‌த்துல‌யும் ப‌திவை இணைச்சிடுங்க‌ :)

Dr. Srjith. said...

Welcome Mr. PadmaHari,
நான் ப்ளாக்-கில் எழுதுவது புதிது, ஆனால் ப்ளாக் படிப்பது அதிகம். அதனால், எப்படி எழுத வேண்டும் என்று ஓரளவுக்கு தெரிந்திருந்தது. அவ்வளவுதான். உங்களைப் போன்ற நண்பர்கள் ஊக்கமளிப்பது மிகவும் சந்தோஷம்.

தொடர்ந்து இணைந்திருப்போம்...

Dr. Srjith. said...

Welcome ரகு சார்,
Font Colorஐ மாத்திடுறேன். தழிழ்மணத்துல இணைக்க முயற்ச்சி பண்றேன், இன்னும் சரிவரலை. சீக்கிரமா சேத்துடுறேன். நன்றி.

நாடோடி said...

நல்ல பயனுள்ள பதிவு....ஆரம்பமே நல்லா இருக்கு டாக்டர்..தொடருங்கள்... நாங்களும் தெரிந்து கொள்கிறோம் உங்கள் அக்குபஞ்சர் மருத்துவ முறையை.. அப்படியே பலருடைய பதிவுகளை படிப்பேன் என்று சொல்லியுள்ளீர்கள்..அவர்களுக்கும் ஒரு சின்ன கமெண்ட் போடுங்கள்..அப்போது தான் உங்களை பற்றி தெரிய வரும்..

நாடோடி said...

டாக்டர் அவர்களே, அந்த word verification-யை நீக்கி விடுங்கள். அப்போது தான் எளிமையாக பின்னூட்டம் இட முடியும்.

Raghu said...

//Welcome ரகு சார்//

டாக்ட‌ர், எதுவாயிருந்தாலும் பேசி தீர்த்துப்போம், அத‌விட்டுட்டு பேருக்கு பின்னாடி இப்ப‌டி கெட்ட‌ வார்த்தையில‌ திட்ட‌ற‌துலாம் வேண்டாம் :))

Dr. Srjith. said...

நன்றி நாடோடி,
உங்கள் ஆலோசனைப்படி இனி நான் படிக்கும் ப்ளாக்குகளில் கமெண்ட் போடுகிறேன்.
Word Verificationஐ தூக்கி விடுகிறேன்.

Dr. Srjith. said...

ரகு, ஓகே! இனிமே உங்க பேருக்கு பின்னாடி *****(censored போடலை..!

Paleo God said...

சிறப்பான இடுகைகளுக்கு வாழ்த்துகள்..:)

aruljothi said...

naanum ungal valiyil,anbudan aruljothi,Annai Accupuncture,Kariapatty

krishna said...

sir I have some problem in my spinal card i can't walk normally. I need your help . please suggest any solution for this problem.

Post a Comment