Monday, March 29, 2010

PIN விளைவுகள் - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை - 3

 டிஸ்கி: அக்குபஞ்சர் பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காக எழுதுகிறேனே தவிர, எழுத்துக்கும் வலைப்பதிவிற்கும் நான் புதியவன் என்பதால் என் எழுத்துப்பிழைகளை பொறுத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------

ங்களுக்கு இன்னொரு ஆச்சர்யமான விஷயம் தெரியுமா..! இந்தத் தொடரைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு, ஏற்கனவே அக்குபஞ்சர் தெரியும் என்று சொன்னால் உங்களால் நம்பமுடியுமா..? இது உண்மை... எப்படித் தெரியுமா..!

இதற்கு முந்தைய பகுதியில், இந்தத் தொடரைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு, ஏற்கனவே அக்குபஞ்சர் தெரியும் என்று சொல்லியிருந்தேன். கண்டிப்பா அதை நீங்க நம்பியிருக்க மாட்டீர்கள்..!

இதோ அதற்கான சான்று!

ஏதாவது விஷயத்தை நீங்கள் மறந்துவிட்டீர்களென்றால் என்ன செய்வீர்கள்? நெற்றியில் விரலால் தேய்த்தபடி யோசிப்பீர்களல்லவா..! அதுவும் ஒரு அக்குபஞ்சர் பாய்ண்ட்-தான். அதே போல், நீங்கள் பள்ளியில் படிக்கும்போது, வகுப்பறையில் மாணவர்கள் தூங்கினால், டீச்சர் வந்து காதைத் திருகி எழுப்புவார்களல்லவா..! அதுவும் ஒரு அக்கு பாய்ண்ட்-தான். காது திருகப்படும்போது, மூளைக்கான இரத்த ஓட்டம் அதிகமாகி விரைவில் முழிப்பு வந்துவிடும். அதே போல், தலையில் குட்டுவதும் மூளையை ஸ்டிமுலேட் செய்து மாணவனை துடிப்பாக ஆக்கும். வாத்தியார் நம்மை இதெல்லாம் செய்து முடித்ததும் நாம் அழுதுக் கொண்டிருப்பதால் இதையெல்லாம் கவனித்திருக்கு மாட்டோம்.

இதுமட்டுமல்ல, ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாசம் வெறும் காலில் நடக்க வேண்டும் என்று பழக்கம் உள்ளதல்லவா! அது பயங்கரமான பழக்கம், இதை பழகும்போது, அந்த பக்தர்களுக்கு உள்ளங்கால் மூலமாக எல்லா உறுப்புகளுக்கும் சீராக எனெர்ஜியானது சர்குலேட் ஆகும். இது இப்போது வேண்டுமானால், வருடம் ஒருமுறை மட்டுமே நமக்கு வாய்க்கலாம், ஆனால் முன்னொருகாலத்தில், காலில் செருப்பு அணியாமல் நடந்த நம் முன்னோர்கள் அனைவரும் அதிக காலம் வாழ்ந்திருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

அக்குபஞ்சர் ஊசி உங்கள் உடம்பில் குத்தப்படும்போது எப்படி இயங்குகிறது..?

உங்கள் உடம்பில் குத்தப்படும் ஊசி, குளத்தில் எறிந்த கல் ஏற்படுத்தும் கொப்புள்சுழிபோல் அந்த இடத்தைச்சுற்றி ஒரு எனர்ஜி அலையை ஏற்படுத்தும், அந்த அலையானது, தொடர்ந்து சென்று அடுத்த அக்குப் புள்ளியை ஸ்டிமுலேட் செய்யும், அப்போது, அந்த புள்ளி மீண்டும் ஒரு அலையை ஏற்படுத்தும், இப்படி அந்த அலைகளின் தொடர்ச்சி, நாம் எந்த உறுப்பை நோக்கி ஊசி செலுத்தினோமோ, அந்த உறுப்பிற்கு சென்றடையும். இப்படி நம் உடம்பின் பல்வேறு இடங்களில் பரவியிருக்கும் எனர்ஜிகளை வெவ்வேறு பாய்ண்டுகள் மூலம் தேக்கி, அந்த குறிப்பிட்ட உறுப்பிற்கு செலுத்தப்படும்.

இதில் ஒரு அட்வான்டேஜ் என்னவென்றால், நாம் எனர்ஜியை வழிப்படுத்தி கொண்டு செல்லும் பாதையில் இருக்கும் மற்ற உள்ளுறுப்புகளுக்கும் அந்த எனர்ஜியானது போய் சேரும். எனவே அந்த உறுப்புகளும் சீராகும்.  உதாரணத்திற்கு, சென்ற வருடம், ஒரு பேஷண்ட், தனக்கு கிட்னியில் கல் இருப்பதாக கூறி என்னிடம் வந்தார்... அவரது கிட்னிக்கு எனர்ஜி செலுத்தும் வகையில் நான் அவரது பாதத்தி(லும்)ல் ஊசி குத்தியிருந்தேன். சுமார் 30 நாட்கள் இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்ட அவர், சிகிச்சையின் முடிவில், கிட்னியில் இருந்த கல் கரைந்தது குறித்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார், அப்போது, தனக்கு நீண்ட நாட்களாக காலில் இருந்த ஒரு சின்ன வீக்கமும் இப்போது சரியாக விட்டது என்று கூறினார். எனக்கு அவரிடம் இந்த பிரச்சினை இருப்பது தெரியவே தெரியாது. எனது நோக்கம் அவரது கிட்னியை குணப்படுவது மட்டுமே..! அவரது கால்வீக்கத்தை அல்ல! ஆனால் காலில் குத்தப்பட்ட ஊசி அவரது வீக்கத்தையும் சேர்த்து குணப்படுத்தியிருக்கிறது. இதில் பக்கவிளைவுகள் எதுவும் வரவே வராது என்பது உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்! ஆனால், அதற்கும் ஒருபடி மேலாக, சிகிச்சையில் நமக்கிருக்கும் இதர பிரச்சினைகளும் குணமாவது என்பது நல்லதுதானே..!

இந்த வார டிப்ஸ்
நமது உடம்பில் டெம்பரேச்சர் அதிகமாகும்போது, நமது இடது அல்லது வலது கையில், ஆள்காட்டி விரலிலும் மற்றும் கட்டை விரலிலும், இருபது அல்லது முப்பது நிமிடத்திற்கு, நாம் துணிகாய வைக்க உபயோகிக்கும் ப்ளாஸ்டிக் க்ளிப்பை (இரும்பு க்ளிப் வேண்டாம்), விரல் நுணியில் மாட்டி வைக்க, டெம்பரேச்சர் சீராகும்.


இந்த வார QUOTE
QI permeates all activivites of universe...
If tree is planted heaven helps to grow, if it is cut down, heaven helps to rot.

                                                                                           - Shih Tshu Lai Chi, 1005 A.D.

(தொடரும்...)

17 comments:

பதி said...

சுவாரசியமாக உள்ளது.
தொடருங்கள் !!!!!! :)

கே. பி. ஜனா... said...

கூர்மையான பதிவு! ரொம்ப பயனுள்ளதாகாவும் சுவாரசியமாகவும் இருக்கு டாக்டர்! தொடர்ந்து எழுதுங்கள்.

Dr. Srjith. said...

நன்றி பதி,
தொடர்ந்து வாருங்கள்..!

நன்றி திரு K.B. JANARTHANAN,
//கூர்மையான பதிவு!//
அழகான கமெண்ட்...! கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்.

நாடோடி said...

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல் டாக்ட‌ர். தொட‌ருங்க‌ள் ஆவ‌லாய் உள்ளோம்.

Raghu said...

டோக்டேர், என்ன‌ இது ப்ரொஃபைல் ஃபோட்டோல‌ ஆக்ஷ‌ன் ஹீரோ ரேஞ்சுக்கு முறைச்சுகிட்டு இருக்கீங்க‌...:)

எழுத்து ந‌டை இய‌ல்பா, எளிமையா இருக்கு....நிறைய‌ ப‌ய‌னுள்ள‌ த‌க‌வ‌ல்க‌ள்...தொட‌ருங்க‌ :)

அண்ணாமலையான் said...

தொடருங்கள் வாழ்த்துக்கள்...

KVPS said...

வாழ்த்துக்கள்!

Dr. Srjith. said...

வாங்க நாடோடி சார்,
நீங்கள்லாம் படிக்கிறீங்க என்கிற நம்பிக்கையிலதான் எழுதிட்டிருக்கேன். ஆதரவுக்கு நன்றி!

வாங்க ரகு,
//டோக்டேர், என்ன‌ இது ப்ரொஃபைல் ஃபோட்டோல‌ ஆக்ஷ‌ன் ஹீரோ ரேஞ்சுக்கு முறைச்சுகிட்டு இருக்கீங்க‌//
அது ஹரீஷ் சார் எடுத்த ஃபோட்டோ, அதான் சினிமா சாயல் அடிக்குதுன்னு நினைக்கிறேன்.

வாங்க அண்ணாமலையான் நண்பரே,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

வாங்க பிரபு,
தொடர்ந்து படிப்பதற்கு நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல தகவல்கள் சார். தொடர்ந்து எழுதுங்கள்.

Dr. Srjith. said...

நன்றி அக்பர் நண்பரே..! கண்டிப்பாக எழுதுகிறேன்.

நாடோடி said...

உங்க‌ளுடைய‌ வ‌லைத்த‌ள‌ம் ப‌ற்றிய‌ அறிமுக‌ம் கீழ்க‌ண்ட‌ ப‌க்க‌த்தில் வ‌ந்துள்ள‌து..அக்ப‌ர் என்ற‌ ப‌திவ‌ர் அறிமுக‌ப‌டித்தியுள்ளார்.. ஸ்டீப‌ன்( நாடோடி)

http://blogintamil.blogspot.com/2010/04/blog-post.html

சிநேகிதன் அக்பர் said...

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுஇருக்கிறேன். முடிந்தால் கருத்து சொல்லுங்கள் சார்.

Dr. Srjith. said...

நாடோடி நண்பரே,
என்னை நண்பர் அக்பர்-இடம் அறிமுகப்படுத்தி, வலைச்சரத்தில் எழுத பரிந்துரைத்ததற்கு மிக்க நன்றி..!

அக்பர் நண்பரே,
வலைப்பதிவுலகிற்கு மிகவும் புதியவனான என்னையும் ஆதரித்து வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி..!

Priya said...

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்கள்...நன்றி!!!

Ahamed irshad said...

தேவையான அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி...

prabhadamu said...

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்கள் நண்பா.

Dr. Srjith. said...

நல்வரவு பிரியா,
மிக்க நன்றி...

வாங்க அஹமது இர்ஷாத்,
பகிர்வை பாராட்டியதற்கு நன்றி...

வாங்க தோழி பிரபாதாமு,
வருக்கைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

Post a Comment