Tuesday, April 6, 2010

PIN விளைவுகள் 4 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை


டிஸ்கி: அக்குபஞ்சர் பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காக எழுதுகிறேனே தவிர, எழுத்துக்கும் வலைப்பதிவிற்கும் நான் புதியவன் என்பதால் என் எழுத்துப்பிழைகளை பொறுத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
ருவர் கிட்னி பிரச்சினை காரணமாக அலோபதி மருத்துவரிடம் சென்று ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளும்போது, முதலில் மருத்துவர் அந்த பேஷண்டிடம் முன்மருத்துவ ரெக்கார்டுகளை (Past Drug History) பற்றி விசாரிப்பார், அதற்கு காரணம், ஏற்கனவே அந்த நபர் வேறு எந்தெந்த மருந்துகளை உட்கொள்கிறார் என்பதை தெரிந்துக் கொள்வது அவருக்கு மிகவும் அவசியம். ஏனென்றால், கிட்னி பிரச்சினைக்காக அவர் பரிந்துரைக்கப்போகும் மருந்தானது, பேஷ்ண்ட் ஏற்கனவே சாப்பிட்டுவரும் மருந்துகளுடன் சேரும்போது ரசாயன மாற்றத்தின் காரணமாக பேஷண்டுக்கு பிரச்சினை ஏற்படாமலிருக்க இந்த பாஸ்ட் மெடிகல் ஹிஸ்ட்ரி தேவைப்படுகிறது. ஆனால், இந்த பிரச்சினை அக்குபஞ்சரில் கிடையாது. நீங்கள் வேறு எந்த மருத்துவ முறைகளையும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும்போதும், அக்குபஞ்சர் மருத்துவமுறையை உங்கள் உடம்பு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும்.

நம் உடம்பில் பிரச்சினை எப்போது வருகிறது தெரியுமா..? இயற்கைக்கு மாறான பழக்கவழக்கங்களை நாம மேற்கொள்கிறபோதுதான். அப்படிப்பட்ட செயல்கள் நம் உள்ளுறுப்புக்களில் கழிவுகளை தேங்கச்செய்கிறது. கழிவுகள் உடலின் எந்த உறுப்பில், எந்த பகுதியில் தேங்குகிறதோ, அங்கு உடம்பு தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது. இதுதான் காலப்போக்கில், ஜூரம், வயிற்றுப்போக்கு இப்படி பல விதங்களாக வெளிப்படுகிறது. உலகத்தில் உள்ள எந்த ஒரு வியாதி ஒருவருக்கு வந்தாலும், அவரது உடம்பு "Red Alert"ஆக்கி காட்டும். உதாரணத்திற்கு Common Fever என்ற ஜூரம் வந்த ஒருவரின் முகம் சிவந்திருப்பதைக் காணலாம். இந்த காரணத்தினால்தான், 'Fever is not a Disease, it is a symptom' என்று சொல்வார்கள்.

Foreign particles-னால் நம் உடல் பாதிக்கப்பட்டுபோது, நம் உடம்பிலிருக்கும் antibodies என்ற நோய் எதிர்ப்பு சக்தி அந்த கிருமிகளை எதிர்த்து போராடும், ஆனால், தாக்குதலில் தோல்வி தழுவும்போது நம் உடலுக்கு மருத்துவம் தேவைப்படுகிறது. மற்ற மருத்துவமுறைகளில் மருந்து மாத்திரைகளால் இந்த antibodiesக்கு சக்தி கூட்டுகிறார்கள். ஆனால், அக்குபஞ்சர், நம் உடம்பிலிருந்து வெவ்வேறு பகுதியிலிருக்கும் சக்தியை கூட்டி நோயெதிர்ப்பை சக்தியை கூட்டுகிறது. இதனால், நோயெதிர்ப்பு சக்தியை மாத்திரை மருந்துகளால் ஏற்றப்படும்போது, வேறு விதமான பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புள்ளதை அக்குபஞ்சர் முறையில் தவிர்க்க முடிகிறது. நான் மற்ற மருத்துவ முறைகளை அடிக்கடி உதாரணம் காட்டுவதற்கு முக்கிய காரணம், பல வருடமாக நமது மக்கள் வேற்று மருத்துவமுறைகளை உபயோகித்து அதன் அடிப்படைகளை அறிந்திருப்பதால் மட்டுமே. இப்படி ஒப்பிட்டு காட்டுவது சுலபமாக மக்களுக்கு சென்றடையவைக்கும் நோக்கமே தவிர, மற்ற மருத்துவமுறைகளை மட்டம் தட்டுவதற்க்கல்ல..! ஒவ்வொரு மருத்துவமுறைகளிலும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்பதை என்னையும் சேர்த்து எல்லா மருத்துவர்களும் உணர்ந்தவர்களே என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

நம் உடம்பில் பிரச்சினை எங்கு எந்த இடத்தில் உள்ளது என்பதை கண்டறிய Scanning, X-Ray போன்ற கருவிகள் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். இந்த கருவியில் நாம் சோதித்துக் கொள்ள சில நூறு ரூபாய்களையாவது செலவிட வேண்டியிருக்கும். ஆனால், இந்த கருவிகள் இல்லாமல் நாம் நம் உடம்பில் உள்ள பிரச்சினைகளை தெரிந்துக் கொள்ள முடியும்... எப்படி..? அடுத்த பகுதியில் பார்ப்போம்..!

இந்த வார டிப்ஸ்
ஆஸ்துமா வீஸிங் போன்ற பிரச்சினைகளுள்ள பேஷ்ண்டுகளுக்கான டிப்ஸ் ஒன்றை கூறுகிறேன். இவர்களுக்கு மூச்சுவிடமுடியாதபடி பிரச்சினை ஏற்படும்போது, அவர்களின் அடித்தொண்டையின் கீழே உள்ள குழியில் (பெரும்பாலும் மூச்சு இழுக்கும்போது இந்த குழி நன்றாக புலப்படும்) மூச்சு இழுக்கும்போது, நகம்படாமல் கட்டைவிரலால் ரேகை படுவதுபோல் நன்றாக அழுத்திக் கொடுக்க, மூச்சுவிடுதல் சீராகும்.

இந்த வார QUOTE
 "It is more important to know what sort of person has a disease 
  than to know what sort of disease a person has."
                                                                           -Hippocrates (460-377 B.C.)

(தொடரும்...)

5 comments:

நாடோடி said...

ந‌ல்ல‌ ப‌கிர்வு சார். முதுகு வ‌லிக்கும் கால் பாத‌ம் தேய்வ‌த‌ற்கும் ஏதேனும் ச‌ம்ப‌ந்த‌ம் உண்டா?.. கொஞ்ச‌ம் விள‌க்கினால் தெரிந்து கொள்வேன்.

ர‌கு said...

//இந்த கருவிகள் இல்லாமல் நாம் நம் உடம்பில் உள்ள பிரச்சினைகளை தெரிந்துக் கொள்ள முடியும்... எப்படி..? //

இப்போதுல‌ருந்தே வெய்ட்டிங் டாக்‌ட‌ர்!

அஹமது இர்ஷாத் said...

Useful Article. Thanks For sharing..

Dr. Srjith. said...

வாங்க நாடோடி சார்,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். வேலை கொஞ்சம் அதிகம்.

நீங்கள் கால்பாதம் என்று குறிபிட்டது, மூட்டு  தேய்மானம் என்று நினைக்கிறேன்.  
முதுகு வ‌லி-க்கும், கால் மூட்டு தேய்மானத்திற்கும் சம்மந்தம்  இல்லை.

Hip pain அல்லது முதுகு வ‌லி வருவதற்கு நிறைய காரணம் உண்டு. உதாரணம் பைக் ஓட்டுபவர்கள், COMPUTER-ல் வேளை செய்பவர்கள், பளு தூக்குபவர்கள் etc.
LBA (Low Back Ache) இது தான் நிறைய பேர் சொல்ற ப்ராப்ளம்.

இன்னொரு முக்கியமான  காரணம் obesity அதாவது தொப்பை அதிகமாய் இருந்தால் முதுகுல ஸ்ட்ரைன் தெரியும் இது basic symptom 
இன்னொரு reason IVDP or Disc prolapse... முதுகு தண்டில் மாற்றம் இது எல்லாம் முதுகு வலிக்கன முக்கியமான காரணங்கள்.

உங்களை போலவே பல பேருக்கு இந்த சந்தேகம் உண்டு. Disc compression ஆகும்போது அது ஒரு sciatic nerveஐ ஜாம் பண்ணும், அப்போ 
வலி தொடையிலிருந்து பாதம் வரை இறங்கும். இதை மூட்டு தேய்மானம் என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள். இதன் பேரு Sciatic Neuralgia என்று சொல்வோம்.

மூட்டு தேய்மானம்னா என்னன்னு பெயரிலேயே இருக்கு, அதாவது எலும்புங்கிறது டயர் மாதிரி, யூஸ் பண்ண பண்ண தேய்ஞ்சிடும், இதை Osteo Arthritis (OA)னு சொல்லுவாங்க, அதுக்காக முதுகுல தேய்மானம் நடக்காதுன்னு இல்ல, ரெண்டும் வேற வேற condition... அவ்வளவுதான்.

முதுகுல ஸ்ட்ரைன் விழாம இருக்கணும்னா, ஒரு simple டெக்னிக், எந்த பொருள் குனிந்து எடுத்தாலும், மூட்டி மடக்கி எடுக்கணும்...

அடுத்த பகுதியை விரைவில் எழுதுகிறேன். நன்றி!

---

நன்றி ரகு சீக்கிரம் எழுதுறேன்..!

---

நன்றி அஹமது இர்ஷாத், ஊக்கத்திற்கும் வருகைக்கும் நன்றி

Jaya Prakash said...

டாக்டர் நானும் அக்கு பஞ்சர் கத்துக்கனும்னா யாரை அணுகுவது? நீங்கள் கற்று கொடுக்கிறீர்களா??

Post a Comment